Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
நாளை 27ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றனர் எனத் தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் திருகோணமலை சங்கத்தினர் விநியோகித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சுவரொட்டிகளையும் அச்சங்கத்தினர் ஒட்டியுள்ளனர்.
அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'நாங்கள் 27.05.2017 அன்று திருகோணமலை மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளோம். இவ்வாறு வடமாகாணத்திலும் அனுஷ்டிக்க சங்க அங்கத்தவர்கள் தீர்மானித்துள்ளனர்.
50 நாட்களைக் கடந்து சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் எமக்கு எவ்வித விடிவையும் அரசோ தமிழ் அரசியல்வாதிகளோ வழங்கவோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இது போன்ற செயல் மீண்டும் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே நாம் போராடுகின்றோம்.
இந்த ஹர்த்தாலுக்கு வர்த்தக சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்கம், தனியார் போக்குவரத்து சங்கம், வர்த்தக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், சிற்றூர்தி சங்கம், மீனவர் சங்கம், தனியார் நிறுவனம் போன்றோர் ஆதரவு நல்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago