Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 02 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பொன் ஆனந்தம்
'வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் நீதிமன்றக் கட்டளையை கிழித்தெறிந்து சட்டத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட பிக்கு உட்பட்டவர்களை கைதுசெய்திருந்தால், மேலும் கலவர சூழ்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்தது.
அமைதியையும் சமாதானத்தையும் கடைப்பிடிக்கும்; வகையில் அன்றையதினம் பொலிஸார் புத்திசாதூரியமாக நடந்துகொண்டனர் என திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.திலகரத்தின தெரிவித்தார்.
திருகோணமலை நீதிமன்றத்தில் அவர் குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றிற்கு விளக்கமளித்தார்.
கிழக்கு மாகாண சபை அமர்வு கடந்த 25ஆம் திகதி நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் கலந்துகொண்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளரான தேரர் ஒருவர், நீதிமன்றக் கட்டளையை கிழித்தெறிந்தார்.
இதைப் பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சட்டத்தரணிகளின் குற்றச்சாட்டியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நகர்த்தல் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதவான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.திலகரெட்ண மற்றும் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இது தொடர்பில் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இம்மாதம் 9ஆம் திகதி மீண்டும் இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago