2025 மே 17, சனிக்கிழமை

ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 33 வைத்தியர்கள் நியமனம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 23 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 33 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நியமனங்கள் நேற்றுப் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இவ்வாறு நியமனங்களைப் பெற்றுக்கொண்டவர்களில் 17 பேர் ஆயுர்வேத மருத்துவப் பட்டம் பெற்றுள்ளதுடன், 14 பேர் யுனாணி மருத்துவப் பட்டம் பெற்றுள்ளனர். மேலும் 02 பேர் சித்த வைத்திய பட்டம் பெற்றவர்களாக உள்ளனர்.

இவர்களுக்கான நியமனங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் வழங்கிவைத்தார்.

இம்மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வெளிமாகாணங்களைச் சேர்ந்த சுமார் 60 வைத்தியர்கள் இடமாற்றங்களைக் கோரியுள்ளனர். இவர்களுக்கு இடமாற்றங்களை வழங்குவதில் பல சிரமங்கள் உள்ளது. ஆனால், தற்போது இடமாற்றம் கோரியுள்ள வைத்தியர்களுக்கு இடமாற்றங்களை வழங்க முடியாதுள்ளது. என மாகாண சுகாதார அமைச்சர் கூறினார்.

இவ்வாறு இடமாற்றங்களை கோரியுள்ள 60 வைத்தியர்களில் சிலருக்கு இடமாற்றங்கள் மிக விரைவாக வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .