2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டும்'

Thipaan   / 2016 நவம்பர் 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், பொன் ஆனந்தம்

கல்வி முறையில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டிய சூழல், தற்போது நிலவுகிறது. இலங்கையில், ஏட்டுக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக நாம் உள்ளோம். அதனை விட, பிறவினைக் கல்விகளிலும் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக  நாம் மாறவேண்டும் என,  திருகோணமலை மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் தெரிவித்தார்.

திருகோணமலை ஜீனியஸ் முன்பள்ளியால் நடாத்தப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா, நேற்றுச் சனிக்கிழமை (05) இடம்பெற்றது. அதில், அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், 'பெற்றோர், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக் காலத்தில் தமது பிள்ளையின் கல்வி நடவடிக்கைக்கென உழைப்பது போல, அதற்கு பின்னர் வரும் வகுப்புக்களில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, இந்தக் காலப்பகுதியில் அந்த மாணவர்களின் கல்வி மட்டம் குறைந்து காணப்படுகிறது.

முன்பள்ளிக் கல்வி என்பது, மாணவனொருவனுக்கு மிக முக்கியமான ஒன்று, இப்பருவத்திலேயே சரியான திறமைகளையும் ஆர்வங்களையும் அவர்களுடைய நுண்ணறிவையும் அடையாளம் காண முடியும். எனவே, இந்த வேளையில் அவர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்.

தற்போதுள்ள மாணவர்களின் அறிவு விருத்தியானது, முன்புள்ளவர்களைக் காட்டிலும் அதிகமானது. தகவல் தொழிநுட்பத்தின் வளர்ச்சி,  நவீன தொழிநுட்பம் சூழல் என்பன மிகவும் விருத்தியடைந்து வருகின்றன. எனவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்தே அவர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .