2025 மே 19, திங்கட்கிழமை

'புதிய சம்பூர் ஒன்றை உருவாக்குங்கள்'

Thipaan   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஹரீன் எம். இஸ்மத்

புதிய சம்பூர் ஒன்றை உருவாக்குங்கள் அவ்வாறு உருவாக்குவதன் மூலம் புதிய இலங்கையை புதிய உலகை உருவாக்க முடியும் என, சர்வோதயத் தலைவர் கலாநிதி ஆரியரட்ண தெரிவித்தார்.

சம்பூர் மேற்கு சர்வோதய தாமரை சிரமதான சங்கமும் மற்றும் சம்பூர் கிழக்கு பநிமுருகன் சர்வோதய சிரமதான சங்கமும் இணைந்து, சம்பூர் பநிமுருகன் வித்தியாலயத்தில், நேற்று  நடத்திய சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நிழல்தரும் மரங்களே சக்திதரும். சூரியனோ பிரதி உபகாரம் பார்த்து பூவுலகுக்கு உதவி புரிவதில்லை. மனித குலமொன்றெ அதையெதிர்பார்த்தே தமது பணிகளையும் உதவிகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.

இந்த உலகில் உருவாக்கப்பட்ட அனைத்துக்கும் உயிருண்டு இந்த உயிர்களை நாம் மதிக்கவேண்டும் அன்பு காட்டவேண்டும் உலகமென்பது ஒவ்வொரு பொருட்களாலும் இணைக்கப்பட்டுள்ளது ஒன்றிலிருந்து ஒன்றை நாம் பிரித்;துப் பார்க்க முடியாது.

பிரபஞ்சத்தில் உருவாக்கப்பட்ட அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைகளே எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டவேண்டும். அன்பு செலுத்த சாதி, மொழி, இனம், நாடு என்பன தேவையில்லை.

நான் 66 வருடங்கள் சமூகப்பணிகளில் ஈடுபட்டுவருகிறேன். சுமார் 8 ஆயிரம் கிராமங்களை தரசித்திருக்கிறேன். இலங்கையில் சம்பூர் மக்கள் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

அந்த சவால்களையும் பிரச்சினைகளையும் போராடி நீங்களே வெற்றி கொள்ள வேண்டும். வெற்றிகொள்வதன் மூலம் சம்பூரை உலகம் அறியும் ஒரு நகரமாக எங்களளால் உருவாக்க முடியும். உங்களுக்காக நீங்களே திடசங்கற்பம் பூணவேண்டும்.

அன்பு செலுத்துவதற்கும் சேவையாற்றுவதற்கும் முஸ்லிம் என்றோ, தமிழ் முஸ்லிம் என்றோ பேதம் காட்ட முடியாது நான் 66 வருடங்களாக இந்தத் தாரகமந்திரத்தின் அடிப்படையிலே பணியாற்றி வருகிறேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X