2025 மே 15, வியாழக்கிழமை

'மக்களின் உறுதியான போராட்டமே மீள்குடியேற்றத்துக்கு காரணம்'

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

”மக்களின் உறுதியான போராட்டமும் மக்களின் வைராக்கியமுமே சம்பூரின் மீளக்குடியேற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. அதன்காரணமாகவே, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சம்பூர் பத்திரகாளி அம்பாளின் மூலஸ்தான சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்க காரணமாக அமைந்தது” என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்

திருகோணமலை, சம்பூரில் நீண்ட வரலாற்றைக்கொண்ட பத்திரகாளி அம்பாளின் ஆலய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆலய அறங்காவலர் சபைத்தலைவர் து.கிருபைராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகொணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தர்மநர்த்த வேதாகமமாமணி சோ.இரவிச்சந்திரக்குருக்கள் ஆசிரியுரை மற்றும் பூசைகளை நடத்தி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ,உதவி அரசாங்க அதிபர் ந.பிரதீபன், மூதுார் பிரதேச செயலாளர் யூசுப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

2006 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யுத்தம் காரணமாக சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மூலஸ்தாபன முற்றாக சேதமடைந்ததுடன்,   நல்லாட்சி மாற்றத்தின் பின்னர் பெரும் போராட்டத்தின் மத்தியில்  சம்பூர் மக்கள் மீளக்குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .