2025 மே 19, திங்கட்கிழமை

40 வயதைத் தாண்டிய பட்டதாரிகள் முதலமைச்சரிடம் கோரிக்கை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

40 வயதைத் தாண்டிய, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகளாகிய தங்களுக்கும் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருமாறு, கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள், பட்டதாரிகள்  விடுத்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்த நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே 30 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு மாத்திரமே ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தநிலையில் வயதெல்லையை அதிகரிக்குமாறு பட்டதாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து வயதெல்லால 40ஆக அதிகரிக்கப்பட்டது.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் 40 வயதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் அதிகமானோர் இருப்பதால் வயதெல்லையை மேலும் அதிகரிக்குமாறு முதலமைச்சரை கேட்டுக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X