2025 மே 07, புதன்கிழமை

கிழக்கு மாகாண புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஜப்பான் அரசு ரூ.1,894 மில்லியன் நிதி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளம், கிராமிய வீதி, மற்றும் மாகாணசபை வீதி ஆகியவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு 1,894 மில்லியன் ரூபாவை ஜப்பான் நாட்டு நிதி நிறுவனம் முன்வந்துள்ளது.

இப்பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் கௌரவ அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் உரை நிகழ்த்துகையில், கிழக்கு மாகாணமானது கடந்த யுத்தகாலத்தின் போது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனை புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜப்பான் நாடு தனது நிதி நிறுவனம் மூலமான பல பில்லியன்
நிதியினை இலங்கைக்கு உதவியதையிட்டு நாட்டு மக்கள் சார்பாக ஜப்பான்
நாட்டுக்கு நன்றியைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசனக் குளத்திற்கு 410 மில்லியன் ரூபாவும், கிராமிய வீதி புனர்நிர்மாணத்திற்காக 214 மில்லியன் ரூபாவும், மாகாண சபை வீதிக்காக 1270 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளர் வி.பி. பாலசிங்கம் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் ஜப்பான் நாட்டு தொண்டு நிறுவன இலங்கை பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • ummpa Thursday, 27 October 2011 08:52 PM

    என்ன இது எனக்கு என்றல் ஒன்றும் புரியாமல் இருக்கிறது. 1894 மில்லியன் ரூபாய் காசு கிடைகிறது நிருமான பணிக்கு . இதனால் எவ்வளவு வேலைகளை பண்ணிமுடிக்கமுடியும் அனால் என்ன நடக்கும் . இதைபற்றி சற்று சிந்திக்கவேண்டும் நமது படித்த என்திரிமாரும் மக்களும் . எத்தனை km வீதி அமைக்கமுடியும் என்பதனை கணக்கிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் அப்பதான்.இவர்களின் வங்கிக்கு போகும் பணத்தின் அளவையாவது நிறுத்தமுடியும் .மக்களுக்கு தெளிவுபடுதப்பட்டால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    Reply : 0       0

    meenavan Sunday, 30 October 2011 03:10 AM

    மாகாண அமைச்சரே உங்கள் மாவட்ட கிராம வீதிகள் எல்லாம் காங்கிரிட் வீதிகளாக மாறிவிடுமோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X