Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 மே 05 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அதுல்சலாம் யாசிம்)
வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் அபிவிருத்தி திட்டம் தொடர்பான விசேட செயலமர்வு திருகோணமலையில் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக் கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
ஐந்து ஆண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மேற்படி அபிவிருத்தி திட்டமானது இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் எந்தவொரு செயற்றிட்டங்களும் ஆரம்பிக்கப்படாத நிலையில், தற்போது 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளிலே குறித்தொதுக்கப்பட்ட அனைத்து நிதிகளும் செலவு செய்ப்பட்டிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டில் 1313 மில்லியன் ரூபாயும் 2012ஆம் ஆண்டில் 1970 மில்லியன் ரூபாயும் 2013ஆம் ஆண்டில் 1094 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அம்பாறையில் 15, திருகோணமலையில் 13, மட்டக்களப்பில் 12 என மொத்தமாக கிழக்கு மாகாணத்திலே மூன்று மாவட்டங்களிலும் 40 உள்ளூராட்சி மன்றங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டிக்கிறன.
அதில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அம்பாறை நகரசபை, தமண பிரதேச சபை, லாவுக்கல பிரதேச சபை என்பன உள்ளடக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பதிதாக உருவாக்கப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் இறக்காமம் பிரதேச சபை என்பன இத்திட்டத்தினுள் உள்வாங்கப்படுவதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் செயலாளர் அமலநாதன் குறிப்பிட்டார்.
இவ்விசேட செயலமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளூராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், உள்ளூக்ட்சி ஆணையாளர் உதயகுமார், இத்திட்டத்தின் விசேட நிபுணர்களான பிரதம பொறியிலாளர் பாஸ்கரதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்க்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago