Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 08 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை நகரசபைக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தில் 5 கோடி 75 இலட்சம் ரூபா நிலுவையாக உள்ளதென நகரசபை உறுப்பினர் சிவசுப்பிரமணியம் நந்தகுமார் நேற்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வரியாக 2 கோடி 57 இலட்சம் ரூபாவும் வாடகை நிலுவையாக 97 இலட்சமும் சந்தைகள் வர்த்தக நிறுவனங்கள் என்பனவற்றின் அனுமதிப்பத்திரங்கள், கேளிக்கை விடுதிகள் என்பனவற்றின் நிலுவை 2 கோடி 19 இலட்சம் ரூபாவாகவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்தகால யுத்த சூழ்நிலைகளில் வரிகளைச் செலுத்த முடியாத நிலையில் வரிசெலுத்துபவர்கள் இருந்து வந்துள்ளனர். எதிர்காலத்தில் நீர்வழங்கல், வீதி மின்னிணைப்பு, வீதித்திருத்தம் என்பனவற்றை மேற்கொள்ள பெருமளவான நிதிகள் தேவைப்படுகின்றது. இதனை பராபரிப்பதற்கும் நலனோம்பல் செய்வதும் நகரசபையின் பொறுப்பாகும்.
இவ்வாறான நடவடிக்கைகளை பொதுமக்களின் பங்களிப்புடன் செயற்படுத்த முடியுமென நம்புகின்றேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago