2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணசபைக்கு தெரிவான த.தே.கூ. 11 உறுப்பினர்கள் வெள்ளியன்று பதவியேற்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்களும், எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை காலை, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்பார்கள்' என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிகழ்வொன்றின் போதே இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முன்னதாக 11 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திலிருந்து ஊர்வலமாக கடற்படைத்தள வீதி வழியாக திருகோணமலை நகர மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்படுவர்.

சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களையும்  பங்குபற்றும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X