2025 மே 07, புதன்கிழமை

ஏ.ரி.எம். மூலம் 66 லட்சம் ரூபாவை திருடிய நபர் கைது

Super User   / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கந்தளாயிலுள்ள அரச வங்கியொன்றில் கடந்த 8 ஆம் திகதி ஏ.ரி.எம். அட்டை மூலம் 66 லட்சம் ரூபாவை திருடியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நபர்  பேராறு பகுதியில் ஒளிந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இச்சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் எனக் கருதப்படுதாகவும் அவர் கூறினார்.

கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன்பின் இந்நபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 19 லட்சம் ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி பேராறு பகுதியிலுள்ள அவரின் வீட்டிலிருந்து 42 லட்சம் ரூபா கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (SD)
 


You May Also Like

  Comments - 0

  • avathaani Friday, 16 December 2011 05:24 AM

    போதை பொருளுக்கு அடிமை, ஏ. ரி.எம் அட்டை மூலம் 66 லட்சம் திருடியுள்ளார் என்றால் போதை பொருள் அவரின் மூளையை படு வேகமாக இயக்கியுள்ளதோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X