2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சூடைக்குடா கிராமத்தை 7 வருடங்களின் பின்னர் மக்கள் பார்வை

Kogilavani   / 2013 மார்ச் 21 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சம்பூர் சூடைக்குடா சுனாமி வீட்டுத்திட்டக் கிராமத்தை ஏழு வருடங்களின் பின்னர் அந்த மக்கள் பார்வையிட்டனர். அதற்கான ஒழுங்குகளை படையினர் செய்திருந்தனர்.

இதனையடுத்து சம்பூர் சூடைக்குடா சுனாமி வீட்டுத்திட்டக் கிராமத்தைச் சேர்ந்த 48 குடும்பங்கள் காடுமண்டிக்கிடக்கும் தமது கிராமத்தை நேற்று சென்று பார்வையிட்டனர்.

நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த இந்த மக்களை அழைத்துச் சென்ற குழுவில் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா, மூதூர் பிரிகேட் கொமாண்டர், சம்பூர் கடற்படைப் பொறுப்பதிகாரி டி.ஏ.எல். குணரெட்ன, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பியந்த பத்திரன மற்றும் கிளிவெட்டி நலன்புரி நிலைய பொறுப்பாளர்களான ஆர்.சிவப்பிரகாசம், ரீ.மங்களேஸ்வரி, விமலாதேவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பஸ் ஒன்றில் கிளிவெட்டி அகதி முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் சம்பூருக்கூடாக சூடைக்குடா சுனாமி வீட்டுத் திட்டக்கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

சம்பூர் வில்லுக்குளத்தடியில் கொண்டுசென்று இறக்கப்பட்ட மக்கள் ஏழு வருடங்களின் பின்னர் தமது வாழிடங்களை நேரில் கண்ட சந்தோச மிகுதியால் அந்தக் குளத்தில் நீரை அள்ளிப்பருகியதோடு கை கால் முகமுகம் கழுவி இளைப்பாறினர்.

ஏழு வருடங்களுக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த குடிமனைகள் இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் காடுமண்டிய நிலையில் அழிவடைந்து கிடக்கின்றன.

இடம்பெயர்ந்த அகதி மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளில் தாம் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும், சம்பூரையும் அதனைச் சூழவுள்ள கிராமங்களையும் இலங்கையின் முன்மாதிரி வளங்கொழிக்கும் இடமாக மாற்றுவதற்குத் தாம் திடசங்கற்பம் பூண்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பியந்த பத்திரன மக்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X