2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

13 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது

Kanagaraj   / 2013 மார்ச் 10 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

திருகோணமலை புல்மோட்டை தென்னமரவன் வாடி பிரதேசத்தில் கார் ஒன்றில் இருந்து 13 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணையடுத்தே இவர்கள் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக புல்மோட்டை பொலிசார் தெரிவித்தனர்.

வீதி சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றினை சோதனையிட்டபோது காரில் மறைத்துவைக்கப்பட்ட 13 கிலோ 400 கிராம் கஞ்சாவை மீட்டதுடன் காரில் பிரயாணித்த மூவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் செவனகல, வெள்ளவாய பிரதேசங்களைச் சோர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X