2025 மே 02, வெள்ளிக்கிழமை

200 குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சரினால் உபரணங்கள் கையளிப்பு

Super User   / 2012 ஜூன் 03 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஞாயிற்றுக்கிழமை கூரைத்தகரங்கள்; மற்றும் சமையலறை பாத்திரங்களை வழங்கினார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 11 பிரதேச செயலகங்களுக்கு அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கான சமையலறை பாத்திரங்கள் மற்றம் அடுப்புகள் என்பவற்றையும் அமைச்சர் வழங்கி வைத்தார்.

அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக தலா 40,000 ரூபா பெறுமதி கொண்ட 40 சமையலறை உபகரண தொகுதிகள் உள்ளூராட்சி மன்ற தலைவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. அத்துடன், சீன அரசினால் வழங்கப்பட்ட 12 அடி நீளமுடைய தலா 3,500 ரூபா பெறுமதியுடைய 3000 கூரைத் தகரங்களும் அமைச்சரால் பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X