2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

2000 வருடங்கள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு

எப். முபாரக்   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கும்புறுகஸ்வெவ காட்டுப் பிரதேசத்தில், 43க்கும் மேற்பட்ட, 2,000 ஆண்டுகள் பழமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவென, திருகோணமலை தொல்பொருள் திணைக்கள நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.எச்.ஏ. சுமணதாச தெரிவித்தார்.

யான்-ஓயா நீர் திசைதிருப்பும் திட்ட நடவடிக்கையின் போதே, இக்கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டனவெனவும், அதே பிரதேசத்தில் பல தொல்பொருட்களையும் தமது குழுவினர் கண்டுபிடித்தனரெனவும், அவர் தெரிவித்தார்.

கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மூன்றை, அங்கிருந்து அகழ்ந்தெடுத்து, யான் ஓயா அணைக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் களஞ்சியத்தில், மக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X