2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நகரில் கழிவகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகர சபை சேவைப்பிரதேசத்தில் ஒரு பகுதி கழிவகற்றும் பணி தினயாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான அங்கீகாரம் கடந்த மாதம் நடைபெற்ற நகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கிடைக்கப்பபெற்றுள்ளதாகவும்.

இது அனுமதிக்காக கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சரும், முதலமைச்சருமான சிவநேசதுரை ச்நதிரகாந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நகர சபை செயலாளர் ஏ.ஜி.தெய்வேந்திரம் தெரிவித்தார்.
 
நகர சபையின் திண்மக் கழிவு அகற்றுதல் சம்பந்தமாக குறைபாடுகள் இருப்பதாக பொது மக்கள் பலர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். வாகன பற்றாக்குறை, ஆளணி பற்றாக்குறை என்பனவற்றுக்கு மத்தியில் நகர சபை கழிவகற்றும் சேவையினை வழங்கி வருகின்றது.

ஆனால் குறைபாடுகள் குவிந்த வண்ணமாக இருக்கினறது. இதனை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வதற்காக தனியாரிடம் பரீட்சார்த்தமாக இச்சேவை ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .