Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதிகளிடமிருந்து செல்லிடத் தொலைபேசிகள், பணம் ஆகியவை சிறைக்காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த கைதிகள் தம்வசமிருந்த படுக்கை விரிப்புக்களுக்கு தீ வைத்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் கைதிகள் மூச்செடுக்க முடியாது திணறினர்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படை தீயணைப்பு படைப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, புகை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
திடீர் சோதனை நடவடிக்கையின்போதே கைதிகளிடமிருந்து செல்லிடத் தெலைபேசிகள் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago