Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கூட்டம் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிரதி அமைச்சர் வி.முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரியவதி கலபதி, பிரயந்த பத்திரன, மாவட்ட அரசாங்க அதிபர் மேஜ ஜெனரல் ரஞ்சித் சில்வா, குச்சவெளி பிரதேச செயலாளர் அ.உமா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புடவைக்கட்டு சாகரபுர, பட்டிக்குடா, பொன்மலைக்குடா, பேத்தடித்தீவு, தென்னமரவடி போன்ற பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை குடியமர்த்துவது தொடர்பாகவே இங்கு ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago