2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் முதலாவது மாகாண நூதனசாலை திருமலையில்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

இலங்கையில் முதலாவது மாகாண நூதனசாலை கிழக்கு மாகாணத்தின் திருகோணமைலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில் நிர்மாணிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

மிகப்பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்நூதனசாலை 2011ஆண்டு மார்ச் மாதம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நூதனசாலையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து இன மதங்களை பிரதிபலிக்கும் வகையிலான பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளதாக தவிசாளர் பாயிஸ் கூறினார்.

இந்நூதனசாலை மாகாண சபைகள் சட்டத்திற்கினங்கவே அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தின் போது இந்நூதனசாலை அமைப்பதற்கான அனுமதியை சபை ஏகமானதாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .