2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் நன்னீர் மீன்பிடித் தொழில் அபிவிருத்தி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலை  அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இதனொரு கட்டமாக கந்தளாய் பிரதேசத்திலுள்ள 3 குளங்களில் மூன்று இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
 
நீரியியல் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இக் குஞ்சுகளை வான் அலகுளம், சூரியபுர குளம், கந்தளாய் குளம் என்பனவற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விட்டார். எதிர்காலத்தில் இப்பிரதேசங்களில் நன்னீர் மீன்பிடித் தொழில் அதிகரித்துக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொழிலை நம்பி ஜீவனோபாயம் நடத்தும் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் நன்மையடையவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .