2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருமலையில் வெள்ள நிலைமை மோசம்; பொதுமக்கள் பெரும் சிரமம்

Kogilavani   / 2011 ஜனவரி 13 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் மேலும் மோசடைந்து வருகின்றது. நேற்று புதன்கிழமை இரவு தொடக்கம் பெய்த மழை காரணமாக மீண்டும் வெள்ளத்தின் அளவு அதிகரித்துள்ளது.

இதன் காரணத்தால் மூதூர் கிழக்கு பிரதேசம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கட்டைபறிச்சான், கடற்கரைச்சேனை, சந்தோசபுரம், அம்மன்நகர், பள்ளிக்குடியிருப்பு, தங்க நகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மகாவலி கங்கையின் நிர் மட்டம் உயர்ந்ததன் காரணத்தால் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் கடுமையான வெள்ளம் பரவி காணப்படுகின்றது. ஈச்சிலம்பற்று மாவட்ட வைத்தியசாலை, பிரதேச செயலகம் என்பன வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில் பெருமளவான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

முகத்துவரத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் முகாம், பொலிஸ் நிலையம் என்பனவும் வெள்ளதால் சூழப்பட்டுள்ளன. இங்குள்ள படையினர் தமது முகாம்களில் இருந்து வெளியேறி இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி கட்டிடத்தில் தற்காலிக முகாம் அமைத்துள்ளனர்.பாடசாலையின் ஒரு புறத்தில் பொது மக்களும், மறுபுறத்தில் படையினரும் ஒன்றாக தங்கி உள்ளனர்.

திருகோணமலையில் இருந்து மூதூர், ஈச்சிலம்பற்று பகுதிகளுக்கான கடல்வழி, தரைவழி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை அரச அதிகாரிகளும், தொண்டர் நிறுவனங்களும் கொண்டு செல்ல முடியாதநிலை காணப்படுகின்றது.

இதேவேளை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் யான்ஓயா அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளது. ,தன் காரணமாக திரியாய் பகுதியில் அதிகளவான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • m r khan Friday, 14 January 2011 09:18 AM

    கந்தளாயில் குளத்தின் 10 வான் கதவுகளும் திறந்ததால் சிறு வேளாண்மை பைர்சைஹை மிஹவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X