2025 மே 14, புதன்கிழமை

அமைச்சர் றிஷாட் கிண்ணியா விஜயம்

Menaka Mookandi   / 2011 மே 04 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கிண்ணியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்கின்றார்.

கிண்ணியா நகரசபை தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ருப் விடுத்த அழைப்பையேற்று அமைச்சர் இந்த விஜயத்தினை மேற்கொள்கின்றார். அன்றைய தினம் மாலை அமைச்சரால் கிண்ணியா பாலத்திற்கு அண்மையில் வரவேற்புத் தூண்கான அடிக்கல்லை நாட்டிவைப்பார்.

அதன்பின்னர் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை பாராட்டும் வைபவம், தையற்பயிற்சி நிலைய திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றிலும் அடைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொள்வார். இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் உட்பட பலர் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X