2025 மே 14, புதன்கிழமை

பாடசாலைகளில் வாசிப்பறைகளை செயற்படத்துவது தொடர்பாக கூட்டம்

Super User   / 2011 மே 04 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா மற்றும் மூதூர் கல்வி வலயத்திற்குற்பட்ட 25 பாடசாலைகளில்  வாசிப்பறைகளை செயற்படத்தும் முகமாக ஆரம்ப கூட்டமொன்று கிண்ணியா கல்வி வலய கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா விஷன் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சைபுள்ளா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூதூர் கல்வி பணிப்பாளர் வித்தியானந்தன் மூர்த்தி, வாசிப்பறை இணைப்பாளர் எம்.ஏ.சி.ஆரீப், கிண்ணியா கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர்களான ஏ.எம்.அப்துல்லா, ஏ.நசூர்ஹான் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகள்  என பலர் கலந்துகொண்டனர்.

கிண்ணியா கல்வி வலயத்தில் 16 வாசிப்பறைகளும், மூதூர் கல்வி வலயத்தில் 09 வாசிப்பறைகளும் தெரிவு செய்யப்பட்டு மூன்று வருடத்திற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X