2025 மே 14, புதன்கிழமை

கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்கள விளையாட்டு போட்டிகள்

Menaka Mookandi   / 2011 மே 05 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கையில் கூட்டுறவு சட்டம் உருவாக்கப்பட்டு 100 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இதனை முன்னிட்டு விசேட நிகழ்வுகளை நடத்த கிழக்கு மாகாண கூட்டுறவு திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள்,  மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு கூட்டுறவு திணைக்களத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
மென்பந்து கிரிக்கெட், வலைப்பந்து, கரப்பந்து ஆகிய குழுநிலை போட்டிகளும், மரதன், வேகநடை போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.  மெய்வல்லுநர் திறனை அதிகரிக்கும் முகமாக 40 வயதுக்கு  உட்பட்டவர்களுக்கு இடையே தனியாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இடையே  தனியாகவும், 100மீற்றர், 200 மீற்றர், 400 மீற்றர், 4ஒ100 அஞ்சல், 4ஒ400 அஞ்சல் போட்டிகளும் ஆண், பெண் என தனித்தனியாக நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகள் அடுத்த வாரம்  மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X