2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா கிராமங்களுக்கு புதிய மின் இணைப்பு

Menaka Mookandi   / 2011 மே 05 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

ஜனாதிபதியின் கிராமிய மின்எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச சபை பிரிவில் கிராமங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சபை பிரதி தவிசாளர் கே.எம்.நிஹார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அயராத முயற்சியின் பயனாக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கிண்ணியா பிரதேச சபை பிரதி தவிசாளர் கே.எம்.நிஹார் இவ்வேலைத்திட்டத்தை காக்காமுனை ஹக்கீம் வீதியில் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் எம்.எச்.சனூஸ் கலந்து கொண்டார்.

கிண்ணியா பிரதேச சபை பிரிவில் இவ் வேலைத்திட்டம் 14 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் சுமார் 30க்கு மேற்பட்ட வீதிகளுக்கு இப்புதிய மின் இணைப்பு வழங்கப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X