2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலையில் சாரணர் முகாம்

A.P.Mathan   / 2011 மே 07 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

ஹோரன்கடவெல மெதவாச்சிய வித்தியாலயத்தினால் சாரணர் முகாம் ஒன்று நடத்தப்படுகின்றது. திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் அனுசரணையுடன் இப்பயிற்சி முகாம் 3 தினங்கள் நடைபெறும். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு இம்முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மெதவாச்சிய வித்தியாலய சாரணர்களுடன் திருகோணமலை நகர பகுதி பாடசாலைகளைச் சேர்ந்த 100 சாரணர்கள் இம் முகாமில் பங்கு கொள்கின்றனர். 

புனித சூசையப்பர் கல்லூரி, ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, உவர்மலை விவேகாநந்தா கல்லூரி, நாமகள் வித்தியாலயம், செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம், வெள்ளைமணல் அல்-அசார் முஸ்லிம் வித்தியாலயம் என்பனவற்றின் சாரணர்கள் இம்முகாமில் பங்கு கொள்கின்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணிக்கு இம்முகாம் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X