2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை பொது வைத்தியசாலையின் காவலாளி மீது இரண்டாவது தடவையாக தாக்குதல்

Super User   / 2011 மே 07 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை பொது வைத்தியசாலையின் காவலாளி மீது இரண்டாவது தடவையாக நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை நோயாளிகளை பார்வையிடும் நேரத்தையும் தாண்டியும் நோயாளியொருவரை பார்வையிடர் பலர் வருகை தந்தத்தை தடுத்த போது குறித்த நோயாளரின் உறவினர்கள் தாக்கியதாக திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை மற்றுமொரு காவலாளி தாக்கப்பட்டு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலை காவலாளிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்காவிட்டால்  பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக காவலாளிகளின் மேற்பார்வையாளர் ஏ.றொக்ஸான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X