2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சர்வதேச செஞ்சிலுவைச்சங்க தினத்தையொட்டி இரத்ததானம்

Suganthini Ratnam   / 2011 மே 08 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

சர்வதேச செஞ்சிலுவைச்சங்க தினத்தையொட்டி திருகோணமலை, மொறவெவ சிங்கள மகாவித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

சர்வதேச செஞ்சிலுவைச்சங்க தினம் மே மாதம் 8ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தர்கள், விமானப்படை அதிகாரிகள், ஊர்காவல் படை வீரர்கள் சார்பில் 115 பேர் இரத்ததானம் அளித்ததாக  திருகோணமலை பொதுவைத்தியசாலை இரத்த வங்கிக்குப் பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களிலும் கோவில்களிலும் விகாரைகளிலும் சிரமதானம் நடைபெறவுள்ளதாகவும் திருகோணலை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X