2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம், மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. நீர்ப்பாசனம், திவி நெகும, உணவு உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.

"கடந்த 2 வருடங்களாக மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை விரைவாகவும், மக்களுக்கு பயன்தரும் விதத்திலும் செயற்பட அனைத்து அதிகாரிகளும் முற்பட வேண்டும்" என பிரதியமைச்சர் இதன்போது  வேண்டிக்கொண்டார்.

இக்கூட்டத்திற்கு பௌத்த சாசன பிரதியமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள செயலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X