2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கைதி தப்பியோட்டம்; சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 மே 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை சிறைக்கைதியொருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில்  எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.  

திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி குறித்த சிறைக்கைதியை சரியாக கவனிக்கத் தவறியதாகவும் இதனால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் தெரிவித்தார்.

திருகோணமலை சிறைச்சாலைக் கைதியொருவர் சுகவீனமடைந்த நிலையில்  திருகோணமலை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு திரும்பிச்செல்லும்போது, வைத்தியசாலைக்கு ஏனைய நோயாளிகளை பார்வையிட வந்த ஆட்களுடன் ஆட்களாக  இணைந்து தப்பிச்சென்றுள்ளார். மேற்படி சிறைக்கைதி தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையைச் சேர்ந்த முஹம்மது நஸார் (வயது 36) என்ற சிறைக்கைதியே இவ்வாறு தப்பிச்சென்றவர் ஆவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .