2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிண்ணியா நகரசபையினரால் பிடித்துச்செல்லப்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை விடுவிக்க தண்டப்பணம் அறவீடு

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதான வீதிகளில் நடமாடிய கட்டாக்காலி கால்நடைகளை பிடித்து கட்டிவைத்த நகரசபையினர் அவற்றை விடுவிக்க வேண்டுமாயின் தண்டப் பணம் செலுத்த வேண்டும் என உரிமையாளர்களிடம் கோரியுள்ளனர்.

இப்பிரதேச கால்நடை உரிமையாளர்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கமையவே இக்கட்டாக்காலி கால்டைகள் பிடிக்கப்பட்டிருப்பதாக கிண்ணியா நகரசபையின் செயலாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது பிடித்து வைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு தண்டப்பணமாக ரூபா 2ஆயிரம் செலுத்தப்பட வேண்டும் என்று கிண்ணியா பிரதேச பள்ளிவாயல்களின் ஒலிபெருக்கிகள் மூலம் அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறு அறவிடப்படும் தண்டப் பணத்தின் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள நகரசபையினர், 3 நாட்களுக்குள் மேற்படி கால்நடைகள் மீட்கப்படாத பட்சத்தில் அவை ஏலத்தில் விடப்படும் எனவும் இவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .