2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிண்ணியாவிலுள்ள பாடசாலைகளில் மாலை நேர வகுப்புக்கள்

Suganthini Ratnam   / 2011 மே 19 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் மொழி அறிவை விருத்தி செய்யும் நோக்கில் புதிய மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்மொழியில் எழுதவும் வாசிக்கவும் சிரமப்படும் மாணவர்களுக்கும் எண், எழுத்து வாசிப்பு ஆகியவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் நோக்கிலும் இந்த மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மாகாணக் கல்விப் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பாடசாலைகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள்  மாதத்தில் இரு வாரங்களில் மாலை நேர வகுப்புக்களை நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .