2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிண்ணியாவில் பொலிஸ் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 மே 20 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பொலிஸ் பிரிவினரால்  நடத்தப்படுகின்ற பொலிஸ் நடமாடும் சேவை நாளை சனிக்கிழமை கிண்ணியா சூரங்கல் திஃ அல்-அமீன் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மரட்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவை சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பொதுமக்களுக்கான வைத்திய சேவை, குடிநீர், மின்சாரம் பிரச்சினை, டெங்கொழிப்பு பிரச்சினை, சிறுவர் மற்றும் பெண்களுக்கான சட்ட ஆலோசனை, பொலிஸ் முறைப்பாட்டு பிரதி பெற்றுக்கொள்ளல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த நடமாடும் சேவையில் பொதுமக்கள் கலந்துகொண்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறும் கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .