2025 ஜூலை 03, வியாழக்கிழமை

திருமலை தொண்டர் ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2011 மே 25 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவா)

திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இன்று புதன்கிழமை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதமொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக இன்று புதன்கிழமை  காலை முதல்  உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் ஆலோசகர் ஆர்.ஜெயமோகன் தெரிவித்தார்.

தமது நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாது விடின் வடக்கு, கிழக்கிலுள்ள தொண்டர் ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி பாரிய உண்ணாவிரதத்தை முன்ன்;னடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .