2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக குகவதனி பரமேஸ்வரன் நியமனம்

Super User   / 2011 ஜூன் 04 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கே. குகவதனி பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி  பி.பீ.ஜெயசுந்தர வழங்கியுள்ளார்.

இலங்கை திட்டமிடல் சேவையில் முதலாம் வகுப்பை சேர்ந்த கே.குகவதனி பரமேஸ்வரன் ஏற்கனவே கிண்ணியா, தம்பலகாமம் போன்ற பிரதேச செயலகங்களில் திட்டமிடல் உதவி பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள முதலாவது பெண் திட்டமிடல் பணிப்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X