2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2011 ஜூன் 06 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்களான கடற் தொழில் நீரியல் வளத்துறை பிரதி அபிவிருத்தி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரக்காந்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், உயர் அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X