Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 17 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
தம்பலகாமம் பிரதேச சபை சாரதியொருவர் இனத்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏ.டபிள்யூ.காதர் என்ற சாரதியே தாக்குதலுக்கு உள்ளானவராவார்.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானையில் சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தலைமையில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவைக்கு உழவு இயந்திரத்தில் அதற்கான தளபாடங்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம், 96ஆவது மைல்கல் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
35 minute ago
1 hours ago