2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்வி பணிப்பாளர் மீதான தாக்குதலுக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் கண்டனம்

Super User   / 2011 ஜூன் 29 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஹனீக் அஹமட்)

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஹாசிம் மீது அரசியல்வாதியொருவர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.பி. கமால்தீன் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில்,

'வலயக் கல்விப் பணிப்பாளர் ஹாசிம் மீது அவரின் தங்குமிட இல்லத்தில் வைத்து; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை எமது சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஹாசிம் ஒரு சிறந்த கல்வி அதிகாரி. இலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் தரத்தினைச் சேர்ந்த ஓர் அதிகாரி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பில் நீதி விசாரணைகள் நடத்தப்படுவதோடு, குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படவும் வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஹாசீம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியவில் கிண்ணியாவிலுள்ள அவரின் வீட்டில் வைத்து கிண்ணியா பிரதேச  அரசியல்வாதி மற்றும் அவரின் நண்பர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் கல்விப் பணிப்பாளர் ஹாசீம் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான கல்விப் பணிப்பாளர் தற்போது கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றை சேர்ந்த ஹாசீம் முன்னதாக, அக்கரைப்பற்று வலய  கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன்னரே கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்தார்.        


You May Also Like

  Comments - 0

  • mam.fowz Thursday, 30 June 2011 01:00 AM

    ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் கமல்டீன்(.அதிபர்)
    அவர்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர்க
    ... நான். ச/கொரியா.பௌஸ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X