2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு மூதூர் வலயக் கல்விப் பணிமனையில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 01 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து மூதூர் வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் இன்று  வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூதூர் வலயக் கல்விப் பணிமனை முன்னால் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 'நிர்வாக விடயங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது', 'அடாவடித்தனம் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளரான யூ.எல்.எம்.ஹாசீம் திருகோணமலையில் நடைபெற்ற கல்விச் செயலமர்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டிருந்தார். 


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Friday, 01 July 2011 07:16 PM

    கடல் கடந்து வாழும் தொலைதூர நாட்டின் மக்கள் கல்விக்கு அளிக்கும் கவுரவத்தை நினைக்கும்போது நான் பிறந்த நாட்டில் கல்விக்கு கிடைக்கும் அவமரியாதையை எண்ணி வெட்கிக்கிறேன். இங்குள்ளவர்கள் கல்வி அதிகாரிகளை தலைகுனிந்துதான் முதலில் பேசுவார்கள்.கல்விக்கே முதல் மரியாதை. நம்மவர்கள் இப்படி மாற எதனை யுகம் வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X