Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ, எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஜப்பான் பீஸ் வின்ட்ஸ் நிறுவனத்தால் 31.4 மில்லின் ரூபாய் பெறுமதியான 2 வாகனங்களும் பால் உற்பத்தி இயந்திரங்களும் கிழக்கு மாகாண கால்நடை மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.
ஜப்பானிய தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர் கிழக்கு மாகாண கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ண ராஜாவிடம் கிழக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வைத்து கையிளித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான செயலமர்வுவொன்று கிழக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த திட்டத்தை செயற்படுத்தும் வழிமுறைகள் பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதில் கிழக்கு மாகாண கால்நடை மற்றும் விவசாய அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ரஞசித் சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago