Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள ஒருங்கிணைந்த இரு மொழி கல்வி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 16ஆம், 17ஆம், மற்றும் 18ஆம் திகதிகளில் செயலமர்வொன்றினை கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் இரு மொழிக் கல்வி பிரிவின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த செயலமர்வு திருகோணமலை மாகாண கல்வி திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிரியர்களின் கற்ப்பித்தல் நுட்பங்களை மேம்படுத்துவதும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுபடுத்துவதுமே இந்த செயலமர்வின் நோக்கமாகும்.
தரம் 6 தொடக்கம் 11 வரையிலான வகுப்புக்களில் சுகாதாமும் உடற்பயிற்சியும், சமூக விஞ்ஞானம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த செயலமாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
45 minute ago
48 minute ago
55 minute ago