Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 03 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று வலய கல்வி அலுவலகங்களின் பயன்பாட்டுக்காக ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று வான்களை யுனிசெப் நிறுவனம் வழங்கியுள்ளது.
குறித்த வான்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.புஸ்பகுமார மற்றும் பதில் மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ஈ.போல் ஆகியோரால் கிண்ணியா, ஹோமரன்கடவல, திருக்;கோவில் ஆகிய வலய கல்வி பணிப்பாளர்களிடம் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் மட்டக்களப்பு மற்றும் அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரிகளுக்கு பல் ஊடக படி அச்சு பொறியினை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உபகரணங்களை, பதில் மாகாண கல்வி பணிப்பாளர் ஏ.ஈ.போல் குறித்த கல்லூரிகளின் அதிபர்களிடம் வழங்கி வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago