2025 மே 07, புதன்கிழமை

புதிய கிராமோதய சுகாதார நிலையம் கையளிக்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 07 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அமைத்த  கிராமோதய சுகாதார நிலையத்தை திறந்து வைத்து சுகாதார திணைக்களத்திடம், கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி  கௌ.ஞானகுணாளனிடம் இந்நிலையம் கையளிக்கப்பட்டது.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில்  மாவடிச்சேனை பகுதியில் 5 மில்லியன் ரூபா செலவில் இந்த கிராமோதய சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.  

இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் ஜேர்மன் செஞ்சிலுவைச்சங்கம் என்பன இணைந்து  ஏற்பாடு செய்த இதற்கான நிகழ்வில் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான வதிவிட பிரதிநிதி மெரினா ஹவான்ஸ்ஜன், ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி  அன்ரஸ் லின்டர், புதிதாக பதவி ஏற்கும் வதிவிடப் பிரதிநிதி  டிம் பிரே,  வெருகல் பிரதேசசபைத் தலைவர் விஜகாந், திருகோணமலை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவரும் பொது வைத்தியசாலை அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X