Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 10 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை நீதிமன்ற வீதியில் வங்கியியலாளர் பரீட்சைக்கு தயார் செய்தலுக்கான பயிற்சி நிலையம் ஒன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சக்ஸஸ் இன்ஸ்ரிரியுட் (SUCCESS INSTITIUE) எனும் பெயரில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்நிலையம் ஆரம்பித்து வைக்கப்ட்டது.
இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் சமிந்த வெலஹெதர, திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை ஆகியோர் இணைந்து இதனை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் கல்வியிலாளர்கள் மற்றும பயிற்சியியலாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதுவரை காலமும் இப்பயிற்சியினைப் பெற்றுக் கொள்வதற்கு திருகோணமலையில் இருந்து பயிற்சியாளர்கள் கொழும்பு, கண்டி, குருணாகல் போன்ற இடங்களுக்குச் சென்று வந்திருந்தனர். எதிர்காலத்தில் பயிற்சியாளர்களின் போக்குவரத்து மற்றும் தங்குமிட சுமைகள் இந்நிலையம் மூலமாக குறைக்கப்பட உள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வின் போது சக்ஸஸ் இன்ரிரியுட் நிறுவனத்தின் பணிப்பாளர் நகுல் செல்வனால் 100இ000.00 ரூபாவுக்கான இரண்டு வசதி குறைந்த பயிற்சியாளர்களுக்கான புலமைப்பரிசில் நிதியத்திற்கான சான்றிதழ் வலயக் கல்வி பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது.
roshan Saturday, 12 November 2011 03:38 AM
திருமலையில் நீண்ட கால தேவை ஒன்று பூர்த்தி செய்யப்பட்டது போல தெரிகிறது . . .. .. .
Reply : 0 0
siva Monday, 14 November 2011 07:29 PM
குட் லக்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .