2025 மே 07, புதன்கிழமை

கச்சக்கொடித்தீவு வாராந்த சந்தையில் நீர் தேங்குவதால் பொதுமக்கள் அசௌகரியம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 24 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா, கச்சக்கொடித்தீவு பிரதேசத்தில் நடக்கும் வாராந்த சந்தைப் பகுதியில் நீர் தேங்கி நிற்பதால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக நுகர்வோரும் வர்த்தகர்களும் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

சந்தைப்பகுதி தாழ்நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது பெய்துவரும் பருவ மழையால் இப்பகுதி நீர் தேங்கி சதுப்பு நிலமாக மாறியுள்ளது. இது வாராந்த சந்தை நடவடிக்கையை பெரிதும் பாதித்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை ஒவ்வொரு வருடமும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை பெய்கின்ற செப்டம்பர் மாதம் தொடக்கம் ஜனவரி மாதம் வரையான காலப்பகுதி வரைக்கும் தொடருவதால் தற்போது அமைந்துள்ள சந்தை பகுதியை உயர் நிலப் பிரதேசம் ஒன்றுக்கு மாற்றித் தருமாறு கிண்ணியா பிரதேச சபை தவிசாளரிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X