2025 மே 07, புதன்கிழமை

மூதூரில் கொல்லப்பட்ட ஆசிரியையின் வீட்டுக்கு கிழக்கு முதல்வர் விஜயம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 29 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கடந்த 24ஆம் திகதி கொலை செய்யப்பட்ட ஆசிரியை குருகுலசிங்கம் சிறிவதனியின் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மூதூர், கட்டைபறிச்சான் 2ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள குறித்த ஆசிரியையின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆசிரியையின் அம்மா, சகோதரர்கள், சகோதரி மற்றும் உறவினர்கள் பாடசாலையின் அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி உண்மை நிலைமைகளை கேட்டறிந்து கொண்டதோடு அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X