Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்காக திருகோணமலை மாவட்ட பரீட்சை நிலையங்களில் கடமையாற்ற தெரிவு செய்யப்பட்ட கண்காணிப்பாளர்களுக்கான விளக்கமளிக்கும் கூட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்கிழமை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட பரீட்சைகள் இணைப்பாளர் கே.முருகுப்பிள்ளை அறிவித்துள்ளார்.
பரீட்சை கடமைகளுக்காக இணைப்பாளர்கள், உதவி இணைப்பாளர்கள், மேற்பார்வைளாளர்கள் மற்றும் உதவி மேற்பார்வையாளர்கள் ஆகியோர்கள் வலயக்கல்வி அலுவலகங்களால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்திற்கு சமுகமளிக்கத் தவறியோர் பரீட்சைக் கடமைகளுக்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பரீட்சைக் கடமை செய்ய இயலாதவர்கள் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் வலயக் கல்வித் திணைக்களத்துக்கு அறிவிக்குமாறும் இணைப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
33 minute ago
1 hours ago