2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருமலை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் தயாளன் பதவி நீக்கம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ரமன்)

திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் எஸ். தயாளன் தலைவர் பதவியில் இருந்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து தயாளன் மற்றும் சங்கத்தின் இயக்குநர் சபை உறுப்பினர் ச.சிறிதரக்குமார் ஆகியோரை அவர்களது பதவியில் இருந்து நீக்கும் அவசர உத்தரவை கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.ஏ.எம்.சரீப் இன்று விடுத்துள்ளார்.

திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் 7ஆம் இலக்க கூட்டுறவுச்சங்கத்தின் இயக்குநர் சபை உறுப்பினர்களான தயாளன் மற்றும் சிறிதரகுமாரின் அடிப்படை பொதுச்சபை பிரதிநிதித்துவம் செல்லுபடியற்றதால் இவர்கள் இருவரும்  திருகோணமலை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் இயக்குனர் சபையில் இருந்து நீக்கப்பட்டதாக ஆணையாளர் எம்.ஏ.எம்.சரீப் கூறினார்.

கடந்த ஒரு வருடத்தினுள் 7ம் இலக்க  கூட்டுறவுச்சங்கத்தின் இயக்குநர் சபை ஒருதடவையும் கூட்டப்படாததால் அச்சபை தானாகவே கலைந்துள்ளது. அதன் அடிப்படையில் இச்சபையில் இருந்து பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் இயக்குநர் சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தயாளன் மற்றும் சிறிதரகுமாரின் பதவிகளும் காலாவதியாக்கப்பட்டுள்ளது.

 ஆணையாளரின் உத்தரவுப்படி  தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தயாளன்  தமது பொறுப்புக்களை உடனடியாக உப தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டுறவு ஆணையாளர் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார். தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள தயாளன் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி என்பதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரதிசெயளாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X