Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பாடசாலை சுகாதார மேம்பாட்டுத்திட்ட வினாடி வினாப்போட்டி நேற்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மத்திய கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி போட்டி பாடசாலை மாணவர்கள் மத்தியில் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களைச் சேர்ந்த 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களும் தமது பாடசாலைகளில் மாகாணக் கல்வி அலுவலகத்தினால் நடத்தப்பட்ட முதலாம் கட்ட எழுத்துப் பரீட்சையில் பங்குபற்றினர்.
இப்பரீட்சையில் முதல் 7 இடங்களை பாடசாலை மட்டத்தில் பெற்ற மாணவர்கள் 2ஆம் கட்டமாக வலய மட்டத்தில் எழுத்துப் பரீட்சைக்கு தோற்றினர். இப்பரீட்சையில் முதல் 7 இடங்களை பெற்றவர்கள் வலய மட்ட வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வலய வெற்றியாளர்கள் தமது வலயத்தின் சார்பில் இன்றைய மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றினர். மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற 7 இறுதிப்போட்டியாளர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ரூபவாகினி கலையகத்தில் இடம்பெறும் தொலைக்காட்சி வினாடி வினாப்போட்டியில் பங்குபற்றுவர்.
இப்போட்டியில் முதல் 3 இடங்களைப்பெறும் வெற்றியாளர்கள் இம்மாதம் 21ஆம் திகதி கொழும்பு ரூபவாகினி கலையகத்தில் இடம்பெறும் இறுதி தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றுவர் என கிழக்கு மாகாண கல்வி அலுவலகத்தின் ஆரம்பக்கல்விப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் பு.உதயகுமார் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
34 minute ago
1 hours ago